தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவி

50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவி

50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவி


UPDATED : அக் 31, 2026 03:50 PM

ADDED : அக் 31, 2026 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 03:50 PM ADDED : அக் 31, 2026 03:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்டத்தில் சிறு, குறு கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவியை 50 சதவீத மானியத்தில் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 2 கறவை மாடுகள் அல்லது எருமைகள்; தீவன பயிர் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கருவியை நிறுவும் இடத்தில் மின் வசதி அவசியம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு திட்டத்தின் கீழ் இக்கருவியைப் பெற்றிருக்க கூடாது.

கருவியின் மொத்த விலையில் 50 சதவீதத்தை பயனாளிகள் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும். பெண் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும்.

கால்நடை விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us