/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தில் கிராவல் மண் திருட்டு ; வாகனங்கள் பறிமுதல்
/
கோவில் நிலத்தில் கிராவல் மண் திருட்டு ; வாகனங்கள் பறிமுதல்
கோவில் நிலத்தில் கிராவல் மண் திருட்டு ; வாகனங்கள் பறிமுதல்
கோவில் நிலத்தில் கிராவல் மண் திருட்டு ; வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜன 24, 2025 10:53 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே கோவில் நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் திருட பயன்படுத்தப்பட்ட இரு பொக்லைன்கள், ஒரு டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே குருந்தமலையில் அருள்மிகு குழந்தை வேலாயுத சாமி கோயில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் திருடப்படுவதாக போலீசாருக்கு கோயிலின் செயல் அலுவலர் வனிதா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காரமடை போலீசார், அங்கு சட்டவிரோதமாக அனுமதியின்றி கிராவல் மண் திருடப்படுவதை கண்டறிந்தனர்.
போலீசார் வருவதை கண்டதும் வாகனங்களின் டிரைவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அங்கு அனுமதியின்றி கிராவல் மண் திருட பயன்படுத்தப்பட்ட இரு பொக்லைன் கள் மற்றும் ஒரு டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அனுமதியின்றி கிராவல் மண் திருடிய வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.