/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல் மூன்று இடங்களை பிடித்த கிரீன் பார்க் பள்ளி
/
முதல் மூன்று இடங்களை பிடித்த கிரீன் பார்க் பள்ளி
ADDED : மே 15, 2025 12:32 AM
கோவை; நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டியில் உள்ள, கிரீன் பார்க் சர்வதேச சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவி ஜெயசுகா 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி நியன்த்ரா 494 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் மற்றும் நிகால் அகமது, பிரதிக்யா, சாத்விகா, ஸ்ரீதுர்கா மற்றும் ஹாசினி ஆகிய ஐந்து மாணவர்கள் 493 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர். இப்பள்ளியின் 14 மாணவர்கள், 490க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர், அகாடமி இயக்குனர், இயக்குனர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டி, பரிசுகள், இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.