தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி

 பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி

 பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 20, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.புரம்: கோவை, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு (ஐ.எப்.ஜி.டி.பி.,) நிறுவனத்தில், பசுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவங்கியது.

ஐ.எப்.ஜி.டி.பி., சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் 'நுண் தொழில்முனைவோர்: தேங்காய் சிரட்டை' என்ற தலைப்பில் நடத்தும் இப்பயிற்சியில், தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்ய கற்றுத்தரப்படும்.

பள்ளி, கல்லூரியில் இடைநின்றவர்கள், பழங்குடியினர், வேலைவாய்ப்பற்ற 20 பேருக்கு 42 நாட்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி, உணவு, தங்குமிடம், பயிற்சிக்கான பொருட்கள் இலவசம். பயிற்சியை நிறைவு செய்வோருக்கு மத்திய வனத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் ரபி குமார், விஞ்ஞானிகள் நாகராஜன், ரேகா வாரியர், முதுநிலை திட்ட மேலாளர் விக்னேஷ்வரன், தகவல் பரப்பு மைய அலுவலர் வாமதேவன் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us