/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை குறைகேட்பு கூட்டம்
/
ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை குறைகேட்பு கூட்டம்
ADDED : மார் 08, 2024 01:14 AM
கோவை;பொது வினியோகத் திட்டத்தின் சேவைகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதற்காக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.
இம்மாதத்துக்கான கூட்டம் நாளை (9ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், ரேஷன் கார்டு நகல் பெறுதல், மொபைல் போன் எண் மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றுதல் தொடர்பான குறைகளுக்கு மனு கொடுத்து தீர்வு காணலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

