/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 17, 2025 01:04 AM
கோவை; கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்ப்பு நாள் அரங்கில், வரும் 20ம் தேதி காலை முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்ப்புக்கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
கோவையை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான குறைகேட்புக்கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம், வரும் 20 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள், படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் பங்கேற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.