sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரின் புதிய மருத்துவமனை பிரிவு துவக்கம்

/

ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரின் புதிய மருத்துவமனை பிரிவு துவக்கம்

ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரின் புதிய மருத்துவமனை பிரிவு துவக்கம்

ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரின் புதிய மருத்துவமனை பிரிவு துவக்கம்


ADDED : செப் 30, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி. ஆர்.என்., டயபடிக் சென்டர், தற்போது புதிய மருத்துவமனை பிரிவுடன் விரிவடைந்துள்ளது. நவீனமான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளுடன், நோயாளிகளுக்காக சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கோகுலரமணன் கூறியதாவது:

ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டரில் இப்போது பல புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளோம்.

இதில், 50-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் செய்யப்படும். மேம்பட்ட லேப் வசதிகள், நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கான வெயிட்டிங் ஹால், கார் பார்க்கிங், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி இருப்பறைகள், ஈ.சி.ஜி., அறை, டாப்ளர் ஆய்வக அறை, ஸ்கேனிங் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

எங்கள் மருந்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் விரைவாகவும், 100 சதவீதம் துல்லியத்துடனும் நடைபெறும். இதற்காக உயர் தரமான முழுமையான தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். உயிர் வேதியியல் இரத்த பரிசோதனைகள் (சர்க்கரை பரிசோதனைகள், கொழுப்பு, புரதம்) அனைத்தும் பயோலிஸ்24ஐ இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன எச்.பி.ஏ.1சி பரிசோதனை வாயிலாக எச்.பி.எல்.சி., முறை மூலம் எச்.பி.பிஆர்ஒ லைப் டிஎக்ஸ் இயந்திரத்தில் எடுக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கான உணர்ச்சி நரம்புகளின் இணைப்பை ஆய்வு செய்யும் பரிசோதனை, டாப்லர் ஆய்வு இரத்த ஓட்ட பரிசோதனை, ஸ்கேனிங் பரிசோதனை ஆகிய மேம்பட்ட பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை சலுகை கட்டணத்தில் எடுக்கப்படுகின்றது.

புதிய ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டர் துவங்கியுள்ளதால், அனைத்து பரிசோதனைகளும் மற்றும் சேவைகளும் சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பு சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

வி.கே.கே., மேனன் ரோடு, புது சித்தாபுதுாரில், ஜி.ஆர்.என்., டயபடிக் சென்டர் உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422- 458 0199, 0422- 252 2138, 90876 44003 என்ற எண்களில் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us