/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
ஏழு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : நவ 02, 2024 06:44 AM
கோவை; தமிழகத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி உட்பட ஏழு மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் செப்., மாதம் ஒப்பிடுகையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கடலுார், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், பெரம்பலுார், புதுக்கோட்டை, அரியலுார், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை ஆகிய 24 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது.
செப்.,மாதத்துடன் அக்., மாதத்தை ஒப்பிடுகையில், கிருஷ்ணகிரி 0.63 மீ., திருச்சி 0.15, அரியலுார் 0.15, நீலகிரி 0.28, சிவகங்கை 0.05, தேனி 0.33, நெல்லை 0.01 மீ., ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.