/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்
/
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்
ADDED : நவ 03, 2025 02:32 AM
கோவை: தமிழகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 28 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த செப்., மாதத்துடன் அக். மாதத்தை ஒப்பிடுகையில், தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை தவிர, மற்ற 28 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறியதாவது: ஜூன் முதல் செப்., வரை, தென்மேற்கு பருவமழை காலம். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்காத பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதை வீட்டில் இருந்தே துவங்க வேண்டும். வீட்டில் நாம் பயன்படுத்தும் நீரை வீணாக்காமல், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மழை நீரை மண்ணுக்குள் சேமித்தாலே, நீர் மட்டம் உயரும். சமவெளிப் பகுதிகளில் பல இடங்களில், கான்கிரீட் பயன்பாடு அதிகரிப்பதால், நிலத்துக்குள் நீர் செல்லாமல் வீணாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

