/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.எஸ்.டி. குறைப்பால்... தென்னை நார் தொழில் மேம்படும்; வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
/
ஜி.எஸ்.டி. குறைப்பால்... தென்னை நார் தொழில் மேம்படும்; வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
ஜி.எஸ்.டி. குறைப்பால்... தென்னை நார் தொழில் மேம்படும்; வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
ஜி.எஸ்.டி. குறைப்பால்... தென்னை நார் தொழில் மேம்படும்; வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
ADDED : செப் 26, 2025 09:15 PM

பொள்ளாச்சி:
'மத்திய அரசு ஜி.எஸ்.டி. 2.O திட்டத்தால் வாகனங்கள் விலை குறைப்பு, லாட்ஜ்களில் அறை வாடகை குறைப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறையினர், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மாற்றம் செய்து, ஜி.எஸ்.டி. 2.O என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதில், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், 33 விதமான உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு, முழு வரி விலக்கு, சில உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மீதான வரி, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, தென்னை நார் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு செய்ததால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:
சுயசார்பு பாரதம், 2047 திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி. வரி குறைப்பால், சாமானி ய மக்கள் உபயோகப் படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளது. தென் னை நார் பல்வேறு வகையான பொருட்களில், ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மதிப்பு கூட்டி பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உப பொருட்கள் பயன்படுத்தப்பபடுகின்றன. மதிப்பு கூட்டலுக்கு பயன்படுத்தும், 16 விதமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு மற்றும் சில பொருட்களுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில், டிராக்டர், இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் விலையும் தற்போது குறைந்துள்ளதால் வாங்கி பயன்படுத்த முடியும்.
தர பரிசோதனைக்கு உபயோகப்படுத்தும் கருவிகள், 18 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால், சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஆய்வு கூடங்கள் நிறுவ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தென்னை நார் தொழிலில், 18 சதவீதமாக இருந்த வரி, சில பொருட்களுக்கு 5 சதவீதம், சில பொருட்களுக்கு பூஜ்ஜியமாக மாறியுள்ளது.
தென்னை நார் தொழில் இயந்திரம் மற்றும் பொருட்கள் விலை குறைந்துள்ளதால் இளைய சமுதாயத்தினரிடம் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு, கூறினர் .
பதிவு அதிகரிப்பு
ஜி.எஸ்.டி., வரிக் குறைப்பிற்கு பின் 4 மீட்டர் நீளத்திற்குட்பட்ட கார்களுக்கு 28ல் இருந்து 18 சதவீதம், சொகுசு கார்களுக்கு 45ல் இருந்து 40 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. 350 சி.சி. இருசக்கர வாகனங்களுக்கு, 28ல் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பால் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் வரை 10 - 15 வாகனங்கள் பதிவுகள் நடைபெற்றன. ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பின், நேற்றுமுன்தினம் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம், 70 வாகனங்களும், நேற்று, 80 வாகனங்களும் பதிவுக்கு வந்தன,' என்றனர்.
வாடகை குறைப்பு
தனியார் ேஹாட்டல் உரிமையாளர் மணி கூறுகையில், ''லாட்ஜ்களுக்கான ஜி.எ ஸ்.டி. வரி, 12 சதவீதமாக இருந்தது. இதனால், வாடகை உயர்த்தப்பட்டது. தற்போது, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சிங்கிள், டபுள் அறைகள், ஏசி அல்லது நான் ஏசி என அனைத்து விதமான அறை வாடகை குறைந்துள்ளது,'' என்றார்.