/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு 'குண்டாஸ்'
/
குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 29, 2025 12:38 AM
கோவை; கடந்த மாதம், 30ல் சாய்பாபா காலனி, டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 21, ஒருவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறிக்க முயன்றார். சாயிபாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து, ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.
கடந்த, 27ல் பேரூரை சேர்ந்த விஜய், 27 என்பவர், 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை குடிக்க பணம் கேட்டு தர மறுத்ததால், கொலை செய்துள்ளார்.
இதேபோல், செல்வபுரம், செட்டி வீதியை சேர்ந்த சரவணன், 28 என்பவர், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்துக்காக, சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை கமிஷனர் பரிந்துரையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவுப்படி, மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறையில் உள்ள மூவருக்கும், இதுகுறித்த உத்தரவு நகல் வழங்கப்பட்டது.