/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : மார் 23, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : வடவள்ளி பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அருண்ஹாசன், 39 என்பவரை வடவள்ளி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதால், அருண்ஹாசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.