/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த மூவர் மீது 'குண்டாஸ்'
/
தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த மூவர் மீது 'குண்டாஸ்'
தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த மூவர் மீது 'குண்டாஸ்'
தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த மூவர் மீது 'குண்டாஸ்'
ADDED : அக் 26, 2025 02:56 AM
கோவை: ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த வழக்கில், கைது செய்யப்பட்ட மூவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது .
இருகூர் - பீளமேடு ரயில் பாதையில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மரக் கட்டையை அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ரயிலை கவிழ்க்க ஏழு பேர் மரக்கட்டைகளை போட்டது தெரிந்தது.
இது தொடர்பாக, சென்னை சைதாபேட்டையை சேர்ந்த ஆகாஷ், 21, கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்த தினேஷ், 25, வேதவன், 22, கார்த்திக், 25, கோகுல்கிருஷ்ணன், 24, கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நாகராஜ், 19, தர்மபுரியை சேர்ந்த வினோத், 19 ஆகிய ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகிய மூவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் வழங்கினார்.

