தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேரூர் மடத்தில் குரு வழிபாடு

பேரூர் மடத்தில் குரு வழிபாடு

பேரூர் மடத்தில் குரு வழிபாடு


ADDED : செப் 01, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரூர்: பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 8ம் ஆண்டு குரு வழிபாடு, பேரூர் ஆதின மடத்தில் நேற்று நடந்தது.

மடத்தில் உள்ள பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் குரு மூர்த்தத்தில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், காலை 10:00 மணிக்கு திருமுறை வேள்வியும், 11:00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் பேரொளி வழிபாடும் நடந்தது.

தொடர்ந்து, சாந்தலிங்க பெருமான் அருளிய ‘வைராக்கிய சதகம் தோத்திரம்’ என்ற நுால் வெளியிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us