/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா வித்யாலயாவில் நாளை குருபூஜை விழா
/
ராமகிருஷ்ணா வித்யாலயாவில் நாளை குருபூஜை விழா
ADDED : ஜன 03, 2025 10:48 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை விழா நாளை நடக்கிறது.
நாளை அதிகாலை, 5:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா துவங்குகிறது. பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, பாலமலை ரங்கநாதர் பஜனை குழு, அவினாசி லிங்கம் மனையியல் பல்கலை மாணவிகளின் பஜனை, தண்டபாணி நாம சங்கீர்த்தனை குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு வித்யாலயா கொடியை சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் ஏற்றி வைக்கிறார்.
சுயநிதி பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலை மற்றும் கல்வி பொருட்காட்சியை கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார்.
காலை 11:00 மணிக்கு சென்னை செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியன் நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சியும், பிற்பகல், 1:30 மணிக்கு வித்யாலயா கல்வி நிறுவன மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, மாலை, 3:30 மணியளவில், 'ஸ்ரீ ராமகிருஷ்ணர்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
மாலை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை ஒட்டி அன்னதானம், புகைப்பட கண்காட்சி, புத்தக கண்காட்சி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் செய்து வருகிறார்.