/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கூடம்
/
மின்வாரிய ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கூடம்
ADDED : செப் 30, 2025 12:51 AM

கோவை; கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில், 'மின்வாரிய மனமகிழ் மன்றம்' என்ற பெயரில், உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. மின்வாரிய ஊழல் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., ஆயுஷ் மணி திவாரி துவக்கி வைத்தார்.
மின்வாரியத்துறையின் கீழ், விளையாட்டு ஒதுக்கீட்டில் பலர் பணிக்கு சேர்கின்றனர். இவர்கள் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்ளவும், பிற அலுவலர்கள் ஆரோக்கியத்துக்காக பயிற்சி செய்யவும் உடற்பயிற்சி கூடம், ரூ.17.5 லட்சத்தில் பல்வேறு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி கூடத்தில் ஆர்வமுள்ள அலுவலர்கள், காலை 7 முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 முதல் 7 மணி வரை பயிற்சி மேற்கொள்வர். நிகழ்ச்சியில், மண்டல தலைமை பொறியாளர் சுரேஷ்குமார், மேற்பார்வை பொறியாளர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.