/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொட்டை தலையிலும் முடி வளரும்; பி.ஜி.எஸ்., மருத்துவமனையில் சிகிச்சை
/
மொட்டை தலையிலும் முடி வளரும்; பி.ஜி.எஸ்., மருத்துவமனையில் சிகிச்சை
மொட்டை தலையிலும் முடி வளரும்; பி.ஜி.எஸ்., மருத்துவமனையில் சிகிச்சை
மொட்டை தலையிலும் முடி வளரும்; பி.ஜி.எஸ்., மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : செப் 30, 2025 10:37 PM
மு டி கொட்டுவது தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது,மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. வழுக்கை ஏற்பட மரபணு, மன அழுத்தம் சூழல் காரணமாக அமைந்து விடுகின்றன.இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக முடிமாற்று அறுவை சிகிச்சை பிரபலமாகி வருகிறது. கோவை, சித்தாபுதுாரில் உள்ள பி.ஜி.எஸ்., மருத்துவமனையில் ரீவாம்ப் முடி மாற்று மையத்தில் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பி.ஜி.எஸ்.,மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபு முடி மாற்று அறுவை சிகிச்சை குறித்து கூறியதாவது:
முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் நடவு செய்யப்பட்டு முடி வளர ஓராண்டுகள் ஆகலாம். மூன்று முதல் நான்கு மாதங்களில் சிகிச்சையின் பலன் தெரிய வரும். சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுவது அவசியம். மன அழுத்தம் முடி உதிர்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. இதை கட்டுப்படுத்த யோகா, தியானம் செய்தல், ஆரோக்கியமான வாழக்கை முறை மன அழுத்தத்தை குறைக்க உதவும். அதிக வெப்பம் தரும் ஹேர் டிரையர், ஸ்ட்ரெயினர்களை தவிர்க்கலாம். வைட்டமின், புரதம் மற்றும் சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகள் முடி வலிமையை வளர்ச்சியை மேம்படுத்தும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும், முன்பு ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வந்த பி.ஜி.எஸ்., மருத்துவமனை மற்றும் வசந்தா கருத்தரித்தல் மையம் புதிய பொலிவுடன் சித்தாபுதுாரில் துவங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாலிடெக்னிக் எதிரில் சிறப்பு மருத்துவமனையாக 150 படுக்கை வசதிகளுடன் செயல்பட துவங்கியுள்ளது. நவீன வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை டாக்டர் பிரபு, டாக்டர் வித்யாலட்சுமி உருவாக்கியுள்ளனர்.
வசந்தா கருத்தரித்தல் மையம் மருத்துவமனையில் குழந்தை பேறு பெற பல்வேறு நவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டெஸ்ட் டியுப் பேபி சிகிச்சை, அடைப்பு நீக்கம், நுண்துளை ஆய்வு மற்றும் சிகிச்சை, அதிநவீன லேசர் கருவுருவாக்கும் சிகிச்சை, கருப்பையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகள், பிரசவம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் அதிநவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாரடைப்புக்கு நவீன சிகிச்சை முறையான இ.இ.சி.பி., முறையில் அறுவை சிகிச்சையில்லாமல் தீர்வு காணவும், ஹீலேசன் தெரபி முறையிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏஞ்சியோகிராம் ஏஞ்சியா பிளாஸ்டி முறைக்கான அதிநவீன வசதிகளும் இங்குள்ளன. பேஸ்மேக்கர், எலும்பு முறிவு சிகிச்சை போன்றவைகளுக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
உயிரணுக்களை உயிர்பெறச் செய்து, பல குடும்பங்களில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கி பாராட்டுதல்களை பெற்ற கைராசியான மருத்துவராக டாக்டர் வித்யாலட்சுமி உள்ளார். இந்த மருத்துவமனையில் பல நவீன முறைகளை கையாண்டு கருத்தரித்தலுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார். நவீன சிகிச்சைக்காக பல உயர்தர மருத்துவ தொழில்நுட்பங்கள் கொண்ட கருவிகள் இங்கு உள்ளன. கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை கனிவான கவனிப்பால், பலர் தாய்மையை வென்றுள்ளனர்.
பல்வேறு பரிசோதனைகளுக்கான ஆய்வகங்கள், கருவிகள், மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் பிரசவ வார்டு, குழந்தை பிறந்தவுடன் அதற்கான சிசு கவனிப்பு, பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவமனையில் பொது வசதியாக, அதிநவீன மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள், 150 புதிய நவீன படுக்கை வசதிகள், மனதுக்கு இதம் தரும் சொகுசு அறைகள், ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு கருவிகள் உள்ளன. காப்பீட்டு வசதிகள், பார்க்கிங் வசதி, காத்திருப்போர் அறை என நவீன வசதிகள் இங்குள்ளன.