/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் பணத்தில் 'கை': கர்நாடக அரசு பிடிவாதம்
/
கோவில் பணத்தில் 'கை': கர்நாடக அரசு பிடிவாதம்
ADDED : மார் 01, 2024 07:31 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பிப்., 21ம் தேதி ஹிந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா ஒன்று தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் படி, 10 லட்சம் முதல், ஒரு கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருக்கும் கோவில்கள், அரசுக்கு 5 சதவீதம் பங்கும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வரும் கோவில்கள், 10 சதவீதம் பங்கும் கொடுக்க வேண்டும்.
இது, கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சட்ட மசோதா, கர்நாடக மேலவையில் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அங்கு, காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், தோல்வி அடைந்தது.
இதனால் அந்த மசோதாவை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சட்டசபையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். இதன்பின், மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, நேற்றே கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் வழங்கினால், சட்டமாகும்.

