/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறுநடவு மரங்கள் 'மறுஜென்மம்' செழித்து வளர்ந்துள்ளதால் மகிழ்ச்சி
/
மறுநடவு மரங்கள் 'மறுஜென்மம்' செழித்து வளர்ந்துள்ளதால் மகிழ்ச்சி
மறுநடவு மரங்கள் 'மறுஜென்மம்' செழித்து வளர்ந்துள்ளதால் மகிழ்ச்சி
மறுநடவு மரங்கள் 'மறுஜென்மம்' செழித்து வளர்ந்துள்ளதால் மகிழ்ச்சி
ADDED : நவ 13, 2024 04:22 AM

கோவை : காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும், செம்மொழி பூங்கா வளாகத்தில் இருந்த மரங்கள், கட்டுமான பணிக்கு இடையூறு இல்லாத வகையில், அதே வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டன. அவை செழிப்புடன் நன்கு வளர்ந்திருக்கின்றன.
கோவை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறும்போது, மரங்கள் இடையூறாக இருந்தால், வேரோடு பெயர்த்தெடுத்து, வேறு இடங்களில் மறுநடவு செய்யப்படுகின்றன. கோவை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் பசுமை கமிட்டி மற்றும் 'கிரீன் கேர்' அமைப்பினர் இணைந்து, மரம் மறுநடவு பணியில் ஈடுபடுகின்றனர்.
காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா கட்டும் இடத்தில் உள்ள மரங்கள் கட்டுமானப் பணிக்கு இடையூறு இல்லாத வகையில், அதே வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், கோவை அரசு கலை கல்லுாரி வளாகம், உக்கடம் புல்லுக்காடு, வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி, ஈச்சனாரி தண்ணீர் தொட்டி பகுதிகளில் மறுநடவு செய்யப்பட்டு, நன்கு வளர்ந்துள்ளன. தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு புதிதாக துளிர் விட்டு, அம்மரங்கள் செழித்து வளரத்துவங்கி உள்ளன என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

