/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியருக்கு தொந்தரவு : 5 ஆசிரியர்கள் இடமாற்றம்
/
மாணவியருக்கு தொந்தரவு : 5 ஆசிரியர்கள் இடமாற்றம்
ADDED : ஆக 25, 2025 11:57 PM
போத்தனுார் : அரசு பள்ளி மாணவியருக்கு, பாலியல் சீண்டல் அளித்த ஐந்து ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில், இரு ஆசிரியர்கள், மாணவியரிடம் தவறான தொடுதலில் ஈடுபடுவதாகவும், ஒரு ஆசிரியர் மது அருந்தி வருவதாகவும் புகார் எழுந்தது.
அப்பள்ளி மாணவியர் மூவர் பாதிக்கப்பட்டதாக, வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. கல்வித்துறை அதிகாரிகள், போலீசார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பள்ளியில் மேற்கொண்ட விசாரணையில், இரு ஆசிரியர்கள் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டது.
அடுத்தகட்டமாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஆசிரியர்களிடம் விசாரித்தார்.
இதையடுத்து, விவசாய பிரிவு ஆசிரியர் ஏ.செல்வராஜ், இசையாசிரியர் செல்வராஜ், தாவரவியல் ஆசிரியர் பாலசுப்ரமணி, வேதியியல் ஆசிரியர் சுஜாதா, வரலாறு ஆசிரியர் கலைசெல்வன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.