UPDATED : நவ 07, 2026 04:27 PM
ADDED : நவ 07, 2026 04:24 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், அறிவியல் மற்றும் கலை இலக்கிய கண்காட்சி நடந்தது.
பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்து பேசுகையில், வெற்றியாளர்கள் புதிய செயல்களை செய்வதில்லை. மாறாத செய்யும் செயல்களை புதுமையான வழியில் செய்கிறார்கள். தினமும் வாசிப்பு அறிவை வளர்க்கும். எந்த ஒரு செயலிலும் உங்கள் முழுமையான ஈடுபாடு இருக்க வேண்டும், என்றார்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியன், ‘‘தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள். தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டு, மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்றால் அடுத்த நிலைக்கு உயருங்கள். கடினமான உழைப்பு மட்டுமே, உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும்’’ என்றார்.
முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர்.
