/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் முடி சிகரத்துக்கு போயிருக்கீங்களா!
/
பெருமாள் முடி சிகரத்துக்கு போயிருக்கீங்களா!
ADDED : நவ 13, 2025 09:37 PM
உ லகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட், இமயமலையிலிருக்கிறது. அதே போல் கேரளாவில் உள்ள இடுக்கியில் ஆனைமுடி சிகரம் அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமாகும், இது இரவிக்குளம் தேசிய பூங்காவினுள் அமைந்துள்ளது.
இது போன்ற மிக உயர்ந்த சிகரம் நம் கோவையிலும் உள்ளது. பெருமாள்முடி என்றழைக்கப்படும் இச்சிகரம் ஆனைகட்டிக்கு அருகே உள்ள மாங்கரை சோதனை சாவடியை கடந்து சேம்புக்கரை கிராமத்தின் வழியாக செல்லலாம்.
'பெருமாள் முடி கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது, இது வழக்கமான நாட்களில் பக்தர்களை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபாட்டிற்காக பக்தர்களை வனத்துறை அனுமதிக்கிறது. மலையேற்றம் மேற்கொள்ளும் பாதைபசுமை படர்ந்து காணப்படும். மலையேற்ற பாதையில் வழி நெடுக பழமையான அரிய வகை மூலிகை செடிகளும் அடர்ந்த மரங்களும் காணப்படும். மலை உச்சியில் உயர்ந்த மிகப்பெரிய பாறை நிமிர்ந்து நிற்கிறது. பறைக்கு இடையே அறை போன்ற அமைப்பில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு சுவாமியை தரிசித்து விட்டு பாறையை சுற்றி வந்து மலையை விட்டு இறங்கலாம்.
பெருமாள் முடியிலிருந்து கோவை நகரையும், ஈஷா யோகா மையம், வெள்ளிங்கிரி மலை, ஊட்டிமலைத்தொடர், தடாகம் பள்ளத்தாக்கை பார்க்கலாம். பெருமாள் முடியில் பனி மூட்டமும், மழைப்பொழிவும் இருந்து கொண்டே இருக்கும்.

