/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்க ஆதார் 'அப்டேட்' பண்ணிட்டீங்களா? இன்னும் 35 நாள் தான் இருக்கு!
/
உங்க ஆதார் 'அப்டேட்' பண்ணிட்டீங்களா? இன்னும் 35 நாள் தான் இருக்கு!
உங்க ஆதார் 'அப்டேட்' பண்ணிட்டீங்களா? இன்னும் 35 நாள் தான் இருக்கு!
உங்க ஆதார் 'அப்டேட்' பண்ணிட்டீங்களா? இன்னும் 35 நாள் தான் இருக்கு!
ADDED : நவ 08, 2024 11:55 PM

கோவை; ஆதார் 'அப்டேட்' செய்வதற்கு இன்னும் 35 நாட்களே எஞ்சியுள்ளன. இதுவரை 'அப்டேட்' செய்யாதவர்கள் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க உடனே 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆதார் அடையாள அட்டை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். குழந்தைகளாக பதிவு செய்தவர்களுக்கு முக அடையாளம் கூட மாறியிருக்கலாம். முகவரியும் மாறியிருக்கக் கூடும்.
ஆனால், நாம் ஆதாரில் இவற்றை ஒருமுறை கூட அப்டேட் செய்திருக்க மாட்டோம். ஆதார் என்பது வாழ்நாள் வரை நிலையானது என்பதால், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே பலருக்குத் தெரியவில்லை. உண்மையில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை நிச்சயம் 'அப்டேட்' செய்ய வேண்டும்.
இதுவரை 'அப்டேட்' செய்யாதவர்கள், முகவரி மாற்றம் செய்யாதவர்களுக்கு, இலவசமாக 'அப்டேட்' செய்து கொள்ள , ஆதார் ஆணையம் கடந்த செப்., 14ம் தேதியை இறுதி நாளாக அறிவித்திருந்தது. 'அப்டேட்' செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், வரும் டிச., 14ம் தேதி வரை கால அவகாரம் நீட்டிக்கப்பட்டது.
ஆதார் 'அப்டேட்' செய்யப்படாவிட்டால், அது வங்கிக் கணக்கு உட்பட பல்வேறு இடங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், கால அவகாசம் பலருக்கும் நிம்மதி அளித்தது. ஆனால், அவகாசம் இருக்கிறது என்பதற்காக பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனப் பலரும் இருந்து விடக்கூடும்.
கடைசி நாளுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதுவரை 'அப்டேட்' செய்யாதவர்கள், கடைசி நேர பரபரப்பைத் தவிர்ப்பதற்காக உடனே 'அப்டேட்' செய்து கொள்வது நல்லது.
நாமே செய்யலாம்
ஆதார் 'அப்டேட்' நாமே ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள இயலும். myaadhar.uidai.gov.in என்ற வலைதளத்தில் லாகின் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவு எண்ணை (ஓ.டி.பி.,) பதிவு செய்து உள்ளே நுழையவும். இந்தத் தளத்தில் டாகுமெண்ட் அப்டேட் என்ற பகுதியைக் கிளிக் செய்யவும். அதில், உங்களின் விவரங்களைச் சரிபார்க்கவும்.
சரியாக இருப்பின், வெரிபை என்பதை கிளிக் செய்யவும். பின்னர் அடுத்து வரும் பக்கத்தில், தேவையான மற்றும் புதுப்பிக்க வேண்டிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும். இந்த ஆவணங்கள் 2 எம்.பி., அளவுக்குள் இருக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து உறுதி செய்து, பதிவேற்றவும்.
புகைப்படம், கைரேகையை மாற்றிப் பதிவதற்கு, ஆதார் மையத்துக்கு,அதாவது அஞ்சலகம் அல்லது இ-சேவை மையத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.