/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாளையாரில் ரூ.15.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
/
வாளையாரில் ரூ.15.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
ADDED : ஆக 12, 2025 09:33 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, ரூ.15.50 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையான வாளையாரில், இன்ஸ்பெக்டர் ராஜீவ்குமார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த கேரளா அரசு பஸ்சில் பயணியரிடம் நடத்திய சோதனையில், கோவை, சவுரிபாளையம் உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், 44, என்பவரின் பையில் எந்தவித ஆவணமும் இன்றி, 15.50 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கைது செய்த முத்துக்குமாரை, பறிமுதல் செய்த பணத்துடன் தொடர் விசாரணைக்காக, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.