/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார செயல்பாடு : பள்ளிகளில் ஆய்வு
/
சுகாதார செயல்பாடு : பள்ளிகளில் ஆய்வு
ADDED : நவ 24, 2025 06:26 AM
கோவை: தமிழகத்திற்கு தேசிய நலவாழ்வு ஆய்வுக்குழு வருகை தரவுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சுகாதார செயல்பாடுகள் மற்றும் அது சார்ந்த பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில், 'பள்ளி மாணவர் நலத் துாதுவர்' கட்டாயம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதோடு, துாதுவர் குறித்த விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவர்களின் வருகை குறித்த தகவல்கள், மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல், வருடம் இருமுறை மாணவர்களுக்குத் தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்ட விவரம், ஊட்டச்சத்து மாத்திரைகள் பெறப்பட்ட தேதி, வாராந்திர விநியோக எண்ணிக்கை, மீதமுள்ள இருப்பு மற்றும் மாத்திரைகளின் காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

