/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டம்
/
அரசு பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டம்
ADDED : டிச 01, 2025 04:55 AM

அன்னுார்: மூன்று நாட்களில், 82 பள்ளிகளில், 5,700 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊரக வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
தூய்மை பாரதம் திட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்த பயிற்சி வகுப்பு அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பார்க் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் (சுகாதாரம்) அகமது வஹாப் பேசுகையில், ''ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். வருகிற 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் உள்ள 82 பள்ளிகளில் 5,700 மாணவர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிப்பது மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, பயிற்சியாளர் கருணாகரன் பங்கேற்றனர்.

