/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்'
/
'ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்'
ADDED : மார் 17, 2025 06:10 AM

கோவை; கோவையில், 'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'மகளிர் மட்டும்' மலர் மங்கை விருது வழங்கும் விழாவின் முக்கிய பகுதியாக, டாக்டர்கள் குழுவினர் பங்கேற்று, பெண்களின் உடல் நலன் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
இதில், பி.ஆர்.ஜே., மேக் ஆர்த்தோ மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர் பகவத்குமார், டாக்டர் முஜீப், மற்றும் டயட்டீசியன் வித்யா, பிசியோதெரபிஸ்ட் சந்தியா, குழந்தைகள் நல பிரிவு டாக்டர் அசீமா பாத்திமா ஆகியோர், கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.
டாக்டர்கள் பொதுவாக கூறிய அறிவுரைகள்:
l குடும்பம், வேலை என ஓடிக்கொண்டு இருக்கும் மகளிர் உணவு உண்ணுதல், உறங்குதலில் சரியான ஒழுக்கமுறையை உருவாக்கி, உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
l இரவு 11:00 முதல் காலை, 4:00 மணி வரை உறக்கம் கட்டாயம். இரவில் விழித்து பகலில் உறங்குவது மிகவும் தவறானது.
l 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். உடலில் சிறு கட்டிகள், தொடர்ந்து வலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
l எலும்பு தேய்மானம் காரணமாக, ஆஸ்டியோபோராசிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
l ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், ஆடலாம், நடக்கலாம், யோகா போன்ற ஏதேனும் ஒன்றை செய்யலாம்.
l சர்க்கரை பாதிப்பு வருமுன் காத்துக்கொள்ள வேண்டும். பல நோய்களுக்கு சர்க்கரை அடித்தளமாக உள்ளதால், ஒரு வேளை வந்து விட்டால், கட்டாயம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l உடல் நலன் மட்டுல்ல, மன நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை தினமும் பயிற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.