sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு

/

 கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு

 கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு

 கோவை அரசு மருத்துவமனையில்.. ஓ .ஆர்.எஸ்.கார்னர் . அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு


ADDED : மார் 08, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, தமிழகத்தில் வெப்ப அலை அதிகரித்துள்ள நிலையில், நீரிழப்பு சார்ந்த பிரச்னைகளை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில், ஓ.ஆர்.எஸ்., (Oral Rehydration Solution) கார்னர் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் ஓ.ஆர்.எஸ்., கார்னர் அமைக்கப்படவுள்ளது. உள் நோயாளிகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும்.

வெயில் நேரங்களில் நீரிழப்பு சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கோடை விடுமுறையும் விரைவில் துவங்கவுள்ள சூழலில், குழந்தைகளின் உணவு முறையில் பெற்றோர் கவனமுடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

''பொதுவாக வெயில் அலை அதிகம் உள்ள சூழலில், நீரிழப்பு அதிகம் ஏற்படும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை விடுமுறை சமயங்களில் குழந்தைகள் பலர் துரித உணவு விரும்பி சாப்பிடுகின்றனர். பின் வயிற்று வலி, பேதி என சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு துரித உணவு தவிர்த்து, பழங்கள், சத்தான உணவை நொறுக்கு தீனியாக கொடுக்கலாம்,'' என்கிறார் அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி.

ஓ.ஆர்.எஸ். ஜாக்கிரதை!

'வயிற்று போக்கு உள்ள சமயங்களில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த ஓ.ஆர்.எஸ்., மட்டுமே தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். பெயரில் உள்ள சர்க்கரை பானங்களை குடிக்கக்கூடாது' என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.








      Dinamalar
      Follow us