தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு வாரம் கனமழை நீடிக்கும்

ஒரு வாரம் கனமழை நீடிக்கும்

ஒரு வாரம் கனமழை நீடிக்கும்


ADDED : அக் 19, 2026 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கனமழை இன்னும் ஒருவாரம் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை கோவையில் கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் இரவு மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில், மழை நீர், கழிவு நீர் தேங்கியது. கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பணிகளை துரிதப்படுத்தி, தண்ணீரை அகற்றினர்.

மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. அணையில் 95, அடிவாரத்தில் 18 மி.மீ. மழை பதிவானது. குடிநீர் தேவைக்காக 6.26 கோடி லிட்டர் நீர் எடுக்கப்பட்டது. 33.78 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது.

மழை தொடர்வதால் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. கன மழை பெய்யும் சமயங்களில் ஒரே நாளில் 7 அடி வரை நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதனால், மழையின் வேகம், சிற்றருவிகளில் தண்ணீர் வரத்தை கேரள நீர்ப்பாசனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடுத்த வாரமும் கொங்கு மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்யும் என்கின்றனர் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

மற்ற பகுதிகளில் பெய்த அளவு:

வேளாண் பல்கலை – 3, வேளாண் பல்கலை – 81.60, பெ.நா.பாளையம் – 184, மேட்டுப்பாளையம் – 28, அன்னுார் – 20, கோவை தெற்கு – 52, சூலுார் – 14, தொண்டாமுத்துார் – 15, மதுக்கரை – 41, போத்தனுார் – 45, பொள்ளாச்சி – 6, மாக்கினாம்பாட்டி – 5, பில்லுார் அணை – 3 மி.மீ. பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us