தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருதமலையில் கனமழை

மருதமலையில் கனமழை

மருதமலையில் கனமழை


UPDATED : அக் 16, 2026 07:36 PM

ADDED : அக் 16, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 07:36 PM ADDED : அக் 16, 2026 07:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடவள்ளி: மருதமலை சுற்றுப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மலையில் உள்ள படிக்கட்டு பாதையில், அருவி போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மருதமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், பகல், 1:00 மணிக்கு, கனமழை பெய்ய துவங்கியது. இடைவிடாமல், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீர், ராஜகோபுரம் படிக்கட்டு பாதையில் வழிந்தோடியது.

பொதுமக்கள் மழைநீர் வடிந்தோடும் வரை, மண்டபங்களில் காத்திருந்து பின் இறங்கினர். அதேபோல, மலைகளில் இருந்து வடிந்த மழைநீர், படிக்கட்டு பாதையில் பெருக்கெடுத்து ஓடியது.

தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை, சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளிலும், கனமழை கொட்டியது. இதனால், தோட்டங்கள் மற்றும் மேடான பகுதிகளில் இருந்த ஓடிவந்த மழைநீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us