/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹெல்மெட் பயன்பாடு விழிப்புணர்வு பேரணி
/
ஹெல்மெட் பயன்பாடு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 04, 2026 05:28 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் ெஹல்மெட் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில்,ெஹல்மெட் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி மேலாளர் ரகுநாதன், பேரணியை துவக்கி வைத்தார். போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ. ரியாஸ் அகமது தலைமை வகித்தார். 'எண்ணம் போல் வாழ்க்கை' அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி மாணவர்கள், ெஹல்மெட் அணிந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட், மகாலிங்கபுரம் ஆர்ச், நியூஸ்கீம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கல்லுாரியை அடைந்தனர்.
போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, பாதுகாப்பான பயணம் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது.

