தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘கிம்ஸ்’ மருத்துவமனையில்  உதவி மையம் துவக்கம் 

‘கிம்ஸ்’ மருத்துவமனையில்  உதவி மையம் துவக்கம் 

‘கிம்ஸ்’ மருத்துவமனையில்  உதவி மையம் துவக்கம் 


ADDED : செப் 25, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: தமிழகத்தில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, ‘கிம்ஸ் அவைட்டிஸ்’ மருத்துவமனையில் மருத்துவ சேவைகளை எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்தியானந்தன், உதவி மையத்தை துவக்கி வைத்தார். தமிழிசை சங்க செயலாளர் சண்முகம் பங்கேற்றார். 

தமிழகத்தில் இருந்து வரும் நோயாளிகள்,  அவர்களுடன் வருவோர், மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள், சேவைகள், சிகிச்சை நடைமுறைகள் குறித்த தகவல்களை தமிழிலேயே வழங்கும்நோக்கில் உதவி மையம் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ‘கிம்ஸ்’ மருத்துவமனைகள் கேரளா கிளஸ்டர் தலைமை நிர்வாக அதிகாரியும், இயக்குனருமான பர்ஹான் யாசின், டாக்டர்கள் சிவபாலன், விஷ்ணு, கிரிஷ், முன்னாள் மாவட்ட ஆளுனர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் மேலாளர் சோமன் மேத்யூ, ஸ்ரீ நாராயணகுரு பேரமைப்பின் மாநில தலைவர் செந்தாமரை பங்கேற்றனர்.

மேலும், லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்ட தலைவர் பைங்கிளி ெஷஜில், லயன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி தலைவர் விஜயகுமார், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் மகேந்திரன், செயலாளர் கார்மன் ரொனால்டோ வில்சன் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us