/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார்'
/
'இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார்'
'இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார்'
'இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார்'
ADDED : அக் 21, 2024 06:33 AM

கோவை : வெராண்டா கிளப் சார்பில், 'வெஸ்டர்ன் காட்ஸ் லைட் பெஸ்ட்' எனும் சிறப்பு கருத்தரங்கு, புரூக் பீல்ட்ஸ் மாலில், நேற்று முன்தினம் துவங்கியது; நேற்று நிறைவடைந்தது.
கருத்தரங்கில், 'வரலாற்றில் உள்ள திரிபுகளை நீக்குதல்' எனும் தலைப்பில், கேப்டன் பிரவீன் சதுர்வேதி பேசுகையில்,''தற்போது இருப்பது இந்தியாவின் உண்மையான வரலாறு இல்லை. போலி வரலாறுகளுக்கு மாற்றாக, இந்தியாவின் உண்மை வரலாற்றை சொல்ல வேண்டும். போலி பிரசாரங்களுக்கு பதில், எதிர் பிரசாரங்கள் மட்டுமே.
ஒரு சிலர் மட்டுமே, நமது உண்மையான வரலாறை அறிந்துள்ளனர். பல கோடி இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யூதர்களின் இன படுகொலைகளுக்கு உலகம் முழுவதும் நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.
இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்து யாரும் பேசவில்லை. அதற்கு ஒரு நினைவு சின்னமும் கிடையாது. இந்துக்கள், இந்தியர்களின் வரலாறு, முகலாயர்களின் படையெடுப்பால் அழிக்கப்பட்டன.
பல லட்சம் உயிர் பலியுடன்தான், இஸ்லாமிய படையெடுப்புகள் முடிந்திருக்கின்றன. ஆங்கில கல்வியை ஆயுதமாக மாற்றி, பாரத பெருமைகளை அழித்தனர். காலம், பிரதமர் மோடியை இந்தியாவுக்கு பரிசாக தந்துள்ளது,'' என்றார்.
எழுத்தாளர் அப்பாஸ் மலாடியார் பேசுகையில், ''நாம் தர்மத்தை நம்புகிறோம். தர்மம் என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. இந்திய வரலாறு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. தவறான, போலியான கருத்துக்களே புனையப்பட்டுள்ளன.
தாஜ்மஹால் அன்பின் சின்னமில்லை. இந்துக்கள் படுகொலைகளின் அடையாளம் தாஜ்மகால். இங்கு, இயேசு வரலாறாக பேசப்படுகிறார். ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார். அறிவியல் பூர்வமான விஷயங்களை கடைபிடிக்க, பல்வேறு கருத்துக்கள் ஹிந்து மதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகத்துக்கு பாரதம் அளித்த நவீன அறிவியல் அறிவு கொடைகள் ஏராளம். அவை அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
கருத்தரங்கில், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வெராண்டா கிளப் இயக்குனர் சரவணகுமார், கேப்டன் பிரவீன் சவுத்ரி, வெராண்டா கிளப் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ்., மூத்த நிர்வாகி ரத்தன் சாரதா, யோகி ஆதித்யநாத் சுயசரிதை எழுதிய சாந்தனு குப்தா, வெராண்டா கிளப் நிறுவனர் ஜகன்னாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

