/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முத்ரா' கடன் வாங்கித் தருவதாக இதோ அடுத்ததாக புதுவித மோசடி
/
'முத்ரா' கடன் வாங்கித் தருவதாக இதோ அடுத்ததாக புதுவித மோசடி
'முத்ரா' கடன் வாங்கித் தருவதாக இதோ அடுத்ததாக புதுவித மோசடி
'முத்ரா' கடன் வாங்கித் தருவதாக இதோ அடுத்ததாக புதுவித மோசடி
ADDED : மார் 16, 2025 12:17 AM
கோவை: மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்.,) கடன் என்பது, கார்ப்பரேட் அல்லாத உற்பத்தி, சேவை, சில்லறை வர்த்தகம், வேளாண் வியாபாரம் உள்ளிட்ட தொழில் முனைவோருக்கு உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கடன் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு, ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக, பொது மக்களை தொடர்பு கொண்டு பேசும் மோசடி நபர்கள், முத்ரா லோன் பெற்று தருவதாக கூறுகின்றனர்.
விருப்பமுள்ளவர்களிடம் இருந்து ஆதார், பான்கார்டு பெற்றுக்கொள்கின்றனர். பின்னர், லோன் பெற கமிஷன் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பணம் கேட்கின்றனர். பணம் பெற்றுக்கொண்ட பிறகு, கடன் பெற்று தருவதில்லை.
கோவையில் தற்போது இந்த மோசடியால், பலர் பாதிக்கப்படுகின்றனர். சில வாரங்களுக்கு முன், பெண் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய மோசடி நபர், ரூ. 5 லட்சம் முத்ரா கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணிடம் ரூ. 1 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு ரூ. 1 கோடி வரை பெற்றுத்தருகிறேன் எனக்கூறி, சுமார், ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'நம்மிடம் பணம் பெற்றுக்கொண்டு கடன் பெற்று தருகிறோம் என கூறினால், அது மோசடி என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்றனர்.