/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குப்புறவழிச்சாலை 2வது 'பேக்கேஜ்'க்கு நிதி ஒதுக்கீடு; நிர்வாக அனுமதிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் காத்திருப்பு
/
மேற்குப்புறவழிச்சாலை 2வது 'பேக்கேஜ்'க்கு நிதி ஒதுக்கீடு; நிர்வாக அனுமதிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் காத்திருப்பு
மேற்குப்புறவழிச்சாலை 2வது 'பேக்கேஜ்'க்கு நிதி ஒதுக்கீடு; நிர்வாக அனுமதிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் காத்திருப்பு
மேற்குப்புறவழிச்சாலை 2வது 'பேக்கேஜ்'க்கு நிதி ஒதுக்கீடு; நிர்வாக அனுமதிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் காத்திருப்பு
ADDED : பிப் 10, 2025 05:56 AM

கோவை : கோவையில், மேற்குப்புறவழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டாவது 'பேக்கேஜ்' பணிக்கு நிலம் எடுப்பு பணி, 90 சதவீதம் முடிந்திருக்கிறது. ரூ.340 கோடிக்கு நிர்வாக அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
மேற்குப்புறவழிச்சாலை என்பது, கோவை - பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையத்தில் முடிகிறது; 32.43 கி.மீ., துாரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக, மூன்று 'பேக்கேஜ்'களாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
முதல் 'பேக்கேஜ்' என்பது, 11.8 கி.மீ., இதில், 6 கி.மீ., துாரத்துக்கு தார் ரோடு போடப்பட்டிருக்கிறது. ஆக., மாதத்துக்குள் முதல் பேக்கேஜ் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஜூலைக்குள் முடிக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறையை வேலையை வேகப்படுத்தியிருக்கின்றனர்.
மேற்குப்புறவழிச்சாலை அமையும் கிராம மக்கள் சர்வீஸ் ரோடு போட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன்படி புறவழிச்சாலை பணி முடிவதற்குள், சர்வீஸ் ரோடு போடுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில், தீத்திபாளையத்தில் பாலம் கட்டப்படுகிறது.
இரண்டாவது பேக்கேஜில், 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 340 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி கேட்டு, கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் இரு மாதத்தில் ஒப்புதல் கிடைக்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதன்பின், டெண்டர் நடைமுறை முடிக்க, மூன்று முதல் நான்கு மாதங்களாம்.
இதில், தொண்டாமுத்துார், மருதமலை, கணுவாய் என மூன்று இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டும். மூன்றாவது பேக்கேஜ்க்கு நிலம் கையகப்படுத்த பூர்வாங்கப் பணி துவங்கி இருக்கிறது. அப்பகுதியிலும் சாலை அமைக்க ரூ.220 கோடி தேவைப்படும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'மேற்குப்புறவழிச்சாலை முதல் 'பேக்கேஜ்' பணியை ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
'இச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததும், இரண்டாவது 'பேக்கேஜ்' பணியை துவக்க இருக்கிறோம்' என்றார்.