/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி மேம்பாலப் பணிகள் நெடுஞ்சாலை துறை ஆய்வு
/
அவிநாசி மேம்பாலப் பணிகள் நெடுஞ்சாலை துறை ஆய்வு
ADDED : மே 17, 2025 01:24 AM

கோவை: அவிநாசி மேம்பாலப் பணிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவை அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) மூலம் மேம்பாலம் கட்டப்படுகிறது.
இப்பணிகளை நெடுஞ்சாலை துறை கட்டுமானம், பராமரிப்பு வட்ட கண்காணிப்பு இன்ஜினியர் ரமேஷ், கோட்டப்பொறியாளர் சரவணச் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அண்ணா சிலை இறங்கு தளத்தில் கட்டுமானப்பணிகள், ரோட்டின் தரம், பிரதான ரோட்டில் உள்ள ஓடுதளத்தின் இணைப்பு பகுதி, தடுப்பு சுவற்றின் உறுதித்தன்மை, சாலை பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது, கோட்டப்பொறியாளர் சமுத்திரகனி, உதவி கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.