UPDATED : அக் 11, 2026 06:49 PM
ADDED : அக் 11, 2026 06:38 PM

– நிருபர் குழு –: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்று காலை பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு, ஹிந்து முன்னணி கோவை மாவட்ட தலைவர் ரவி தலைமையேற்றார். மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார். கோட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் என, பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை
திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், குமரலிங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் உதயகுமார், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர்.
