UPDATED : நவ 29, 2026 11:20 AM
ADDED : நவ 29, 2026 11:20 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு அளித்தும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிய மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணியினர், கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயிலில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான ஹிந்து முன்னணியினர் பங்கேற்றனர்.
