ADDED : செப் 15, 2026 09:31 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இந்து முன்னணி சார்பில், 63 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது அல்லாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறு பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். இந்த சிலைகளை சேர்த்து, மொத்தம் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள், பவானி ஆற்றில் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே கரைக்கப்பட உள்ளன.
பொதுக்கூட்டம் முடிந்து ஊர்வலமாக சென்று, ஆற்றில் கரைக்கும் போது இரவு நேரம் ஆகும். அதனால் நகராட்சி நிர்வாகம், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே, பவானி ஆற்றில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஹிந்து முன்னணி துணைத் தலைவர் சதீஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
