/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதத்தின் பெயரால் பயங்கரவாத தாக்குதல் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து அமைப்புகள்
/
மதத்தின் பெயரால் பயங்கரவாத தாக்குதல் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து அமைப்புகள்
மதத்தின் பெயரால் பயங்கரவாத தாக்குதல் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து அமைப்புகள்
மதத்தின் பெயரால் பயங்கரவாத தாக்குதல் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து அமைப்புகள்
ADDED : ஏப் 23, 2025 11:24 PM

கோவை, ;காஷ்மீரில் மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பலியான அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி அடைய, இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் நேற்று புஷ்பாஞ்சலி செலுத்தின.
கோவை மாவட்ட பா.ஜ., சார்பில் காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று மாலை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் காஷ்மீரில் நடந்த சம்பவங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு பேசினார். பலியான, 28 பேரின் ஆத்மா சாந்தி அடைய பூக்களை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர். மாநில பொது செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை, மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.
இந்து முன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானாவில் நடந்த புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். சம்பவத்தில் பலியானோர் படங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. 1,008 மோட்ச தீபம் ஏற்றி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுசெயலாளர் விஜயகுமார் தலைமையில் சிங்காநல்லுார் பகுதியில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ரத்தினபுரியில் நடந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், வி.எச்.பி., தர்மயாத்ரா மாநில பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
பாரத்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும், குடியிருப்போர் சங்கங்கள், பொது நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் கோவையில் பல்வேறு பகுதிகளில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.