/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்து எழுச்சி தினம் கொண்டாட்டம்
/
ஹிந்து எழுச்சி தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 19, 2025 09:12 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலையில், ஹிந்து முன்னணி சார்பில், ஹிந்து எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகர ஹிந்து முன்னணி சார்பில், ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலனின், 98வது பிறந்தநாள் விழா, ஹிந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார். மாவட்ட தலைவர் ரவி, கோட்ட செயலாளர் பாலசந்திரன், பா.ஜ. மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை, சாந்தி, பா.ஜ. நகர முன்னாள் தலைவர் பரமகுரு மற்றும் பா.ஜ. நிர்வாகிகள், ஹிந்து முன்னணி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
உடுமலை ரோடு சிக்கஞ்செட்டியார் பள்ளிக்கு வாட்டர் பில்டர், அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு, ஸ்லேட், பென்சில், பாய், உட்காருவதற்கான ஸ்டூல் ஆகியவை வழங்கப்பட்டன.
ஆனைமலையில் நடந்த விழாவில், நிர்வாகி செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.ஆனைமலை மண்டல் பா.ஜ. பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு, பிஸ்கட், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.