/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.எஸ்.புரத்தில் துணை முதல்வருக்காக காத்திருக்கிறது ஹாக்கி மைதானம்
/
ஆர்.எஸ்.புரத்தில் துணை முதல்வருக்காக காத்திருக்கிறது ஹாக்கி மைதானம்
ஆர்.எஸ்.புரத்தில் துணை முதல்வருக்காக காத்திருக்கிறது ஹாக்கி மைதானம்
ஆர்.எஸ்.புரத்தில் துணை முதல்வருக்காக காத்திருக்கிறது ஹாக்கி மைதானம்
ADDED : டிச 08, 2025 05:52 AM

கோவை: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், ரூ.9.5 கோடியில் சர்வதேச தரத்துக்கு ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதியின் வருகைக்கு காத்திருக்கிறது.
ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநகராட்சி நிதியில் ரூ.9.5 கோடி ஒதுக்கி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 7.02 ஏக்கரில் சர்வதேச ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு 6,500 சதுரடி மீட்டர் பரப்பளவில் 'அஸ்ட்ரோ டர்ப்' எனப்படும் செயற்கை புல்வெளி தளம் அமைக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழா நடத்துவதற்கு துணை முதல்வர் உதயநிதி வருகையை, மாநகராட்சி அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அடுத்த கட்டமாக, ஒரே நேரத்தில் 1,630 பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் கேலரி, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கு அறை மற்றும் கழிப்பிட வசதி, 200 டூவீலர்கள், 110 கார்கள் நிறுத்துவதற்கான 'பார்க்கிங்' வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த மேலும் 15 கோடி ரூபாய் கேட்டு, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்துக்கு மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
வீரர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு
தனி வழி ஏற்படுத்த முடிவு
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஹாக்கி மைதான திறப்பு விழா தேதியை அரசு முடிவு செய்யும். தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடம் கட்ட இருக்கிறோம். பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள், வி.ஐ.பி.,கள் செல்வதற்கு தனித்தனி பாதை ஏற்படுத்தப்படும். நடுவர்கள் மற்றும் மீடியா குழுவினருக்கு தனித்தனி அறை ஒதுக்கப்படும். ஸ்கோர் போர்டு அறை, கருத்தரங்கு கூடம் தனியாக உருவாக்கப்படும்' என்றனர்.

