/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி.,யில் நாளை நீர் பங்கீடு கூட்டம் நடத்துங்க! திருமூர்த்தி நீர்தேக்கதிட்டக்குழு தலைவர் மனு
/
பி.ஏ.பி.,யில் நாளை நீர் பங்கீடு கூட்டம் நடத்துங்க! திருமூர்த்தி நீர்தேக்கதிட்டக்குழு தலைவர் மனு
பி.ஏ.பி.,யில் நாளை நீர் பங்கீடு கூட்டம் நடத்துங்க! திருமூர்த்தி நீர்தேக்கதிட்டக்குழு தலைவர் மனு
பி.ஏ.பி.,யில் நாளை நீர் பங்கீடு கூட்டம் நடத்துங்க! திருமூர்த்தி நீர்தேக்கதிட்டக்குழு தலைவர் மனு
ADDED : நவ 18, 2024 10:27 PM
பொள்ளாச்சி; 'ஆழியாறு, பாலாறு படுகைக்கும் சமமாக நீர் பங்கீடு வழங்கும் வகையில், நாளை (20ம் தேதி) திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும்,' என திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், கண்காணிப்பு பொறியாளரிடம் மனு கொடுத்தார்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பி.ஏ.பி., பாசனத்திட்டம் ஆழியாறு படுகை, பாலாறு படுகை புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், சம அளவில் பாசன பரப்புக்கு ஏற்றவாறு தண்ணீர் வழங்க வேண்டும் என அரசு விதிகள் உள்ளது.
இது குறித்து, நன்கு தெரிந்திருந்தும் சமீப ஆண்டுகளில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவது தொடர்கதையாக உள்ளது.
கடந்தாண்டு கடுமையான வறட்சியில் பாலாறு படுகை முதல் மண்டல பாசனத்தில், இரண்டரை சுற்று தண்ணீருக்கு அரசாணை பெறப்பட்டு, இரண்டு சுற்று தண்ணீரையே முழுமையாக வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏமாற்றி விட்டனர். ஆனால், ஆழியாறு படுகைக்கு அரசு ஆணையின்படி, தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்பது நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் வாயிலாக நேரிலும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனம் குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திலும், இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தற்போது, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில், இந்தாண்டு, 2,867 மில்லியன் கனஅடி நீர் கொடுப்பதாக உறதி அளித்ததாக செய்திகள் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
ஆழியாறு படுகை, 22 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, 2,867 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கும் நிலையில், பாலாறு படுகை, 94,500 ஏக்கர் நிலங்களுக்கு, 12,215 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவரின் தலையீடு எந்த வகையில் ஆழியாறு படுகைக்கு எதிராக இருந்தது என தெரியவில்லை.
இது குறித்து இரண்டு திட்டக்குழு தலைவர்களையும் வைத்து விவாதித்த கூட்டத்தில் தெளிவாக கூறி உள்ளேன். இந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஆழியாறு படுகை திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்திருந்தும், எதற்காக முரண்பட்டு பேசுகின்றனர் என தெரியவில்லை.
கால்வாயில் தண்ணீர் திருடுவோர், ஆழியாறு ஆற்றில் தண்ணீர் திருடுவோர், உப்பாறு, வட்டமலைக்கரை, பூசாரிநாயக்கன் ஏரி உட்பட சட்டத்துக்கு புறம்பாக தண்ணீர் கேட்கும் அனைவருடைய பார்வையும், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவரை நோக்கியே உள்ளது.
எனவே, பாலாறு படுகைக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து கலந்துரையாடல் நாளை (20ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.