தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்


ADDED : பிப் 12, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பணியை புறக்கணித்து கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று மூன்றாவது நாளாக பணியை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் கடந்த, 20 ஆண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்கள் 30 பேர் பணியாற்றுகிறோம். உயர்கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் பிரச்னைக்கு செவி சாய்க்க மறுக்கின்றனர். கவுரவ விரிவுரையாளர்களின் பணிநிரந்தரம், யு.ஜி.சி., அறிவுரையின் படி, ரூ.57,800 சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us