/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் வரைபடத்தில்நிலைத்திருக்கும் ‛ஹோப் காலேஜ்'
/
கோவையின் வரைபடத்தில்நிலைத்திருக்கும் ‛ஹோப் காலேஜ்'
கோவையின் வரைபடத்தில்நிலைத்திருக்கும் ‛ஹோப் காலேஜ்'
கோவையின் வரைபடத்தில்நிலைத்திருக்கும் ‛ஹோப் காலேஜ்'
ADDED : டிச 15, 2025 05:05 AM
க ல்வி நகரமாக கோவை இன்று உலகளவில் அறியப்படுவதற்கு, அதன் பின்னணியில் நீண்ட வரலாற்றுச் செழுமை கொண்ட கல்வி நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. தொழில்நுட்பம், வேளாண்மை, வனம் போன்ற பல துறைகளில் அறிவின் விதைகளை விதைத்த இந்த நிறுவனங்கள், கோவையின் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய அடையாளச் சின்னங்களாக இன்றும் திகழ்கின்றன.
அவ்வரிசையில், முதன்மையாக நினைவுக்கு வருவது, பீளமேட்டில் இன்றைக்கு முக்கியமான பகுதியாக விளங்கும் ஹோப் காலேஜ். இந்தப் பெயருக்குப் பின்னால் மறைந்திருப்பது ஒரு நன்றியுணர்ச்சியின் வரலாறு. சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த சர் ஆர்தர் ஹோப், கோவையின் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் நெருங்கிய நண்பராக இருந்தார். கவர்னர் அளித்த ஆதரவும் ஊக்கமும், ஜி.டி. நாயுடுவை 1945ம் ஆண்டு கோவையில் ஒரு தொழிற்பயிற்சிக் கல்லுாரியை தொடங்கச் செய்தது. அந்த நன்றியின் வெளிப்பாடாகவே, அந்த நிறுவனம் 'ஆர்தர் ஹோப் காலேஜ்' எனப் பெயரிடப்பட்டது. தொடர்ந்து, தடாகம் சாலையில் ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியும் உருவானது. காலப்போக்கில், இந்த இரு கல்வி நிறுவனங்களையும் ஜி.டி. நாயுடு அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். அதன் விளைவாக, இவை இன்று அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன.கல்லுாரிகளின் பெயர்கள் மாறினாலும், அந்தப் பகுதியின் அடையாளமாக 'ஹோப் காலேஜ்' என்ற பெயர் மட்டும் காலத்தைத் தாண்டி கோவையின் வரைபடத்தில் நிலைத்திருக்கிறது.

