sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

/

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை


ADDED : பிப் 03, 2025 05:00 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னையில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் உள்ளது. இதில், சுருள் வெள்ளை ஈ பூச்சித்தொல்லை பரவலாக உள்ளது. இதனால், தென்னை விவசாயம் பாதிக்கப்படுவதுடன், தென்னையில் இருந்து மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு பாதிக்கப்படுகிறது.

சுருள் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதில், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு, 2 விளக்குப்பொறிகள் வைக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை என்கார்சியா என்ற ஒட்டுண்ணி குளவியை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகள் மீது, 10 மரத்துக்கு இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈ தாக்குதலின் போது, செயற்கை மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லியை பயன்படுத்தக் கூடாது. பூச்சி தாக்குதல் அதிகளவில் இருந்தால், வேப்ப எண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 1 மில்லி ஒட்டும் திரவத்துடன் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் ஒரு முறை மட்டும் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us