/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்
/
மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்
ADDED : ஆக 28, 2025 11:14 PM
வால்பாறை; வால்பாறை த.வெ.க., நகர இணை செயலாளர் சையதுஅலி, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். ஆனால், சமீப காலமாக மருத்துவமனையில் போதிய டாக்டர் இல்லாததால், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வனவிலங்கு நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் தொழிலாள்கள் நலன் கருதி, அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள டாக்டர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.