sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் விளம்பர பலகைகள் வந்தது எப்படி? கவனச்சிதறலால் விபத்து அபாயம்

/

மீண்டும் விளம்பர பலகைகள் வந்தது எப்படி? கவனச்சிதறலால் விபத்து அபாயம்

மீண்டும் விளம்பர பலகைகள் வந்தது எப்படி? கவனச்சிதறலால் விபத்து அபாயம்

மீண்டும் விளம்பர பலகைகள் வந்தது எப்படி? கவனச்சிதறலால் விபத்து அபாயம்

2


UPDATED : பிப் 10, 2026 02:16 PM

ADDED : பிப் 10, 2026 05:20 AM

Google News

UPDATED : பிப் 10, 2026 02:16 PM ADDED : பிப் 10, 2026 05:20 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நகரின் பல பகுதிகளில் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. விபத்துக்கு வழிவகுக்கிறது.

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எந்த இடத்திலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என கோர்ட் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறது. அதேநேரம், தமிழக உள்ளாட்சி விதிகளை சுட்டிக் காட்டி, ரோட்டில் இருந்து குறிப்பிட்ட துாரத்தை கடந்து வைத்துக் கொள்வதற்கு மாநகராட்சியால் அனுமதி தரப்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருந்தும் நகரமைப்பு பிரிவினர் அனுமதி தருகின்றனர். ஒரு இடத்தில் வைக்க அனுமதி பெற்று, நகர் முழுவதும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் சந்திப்பு, ஹோப் காலேஜ் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகள் கடந்த மாதம் அகற்றப்பட்டன. இப்போது, அதே இடங்களில் அதே விளம்பரங்கள் மீண்டும் கண்சிமிட்டி சிரிக்கின்றன.

மாநகராட்சி அனுமதி எண் இல்லாமலே விளம்பர பலகை வைக்கப்படுகிறது. பேனரை அகற்றும் அதிகாரிகள், இரும்பு சட்டங்களை அறுத்தெடுப்பதில்லை. சில நாட்கள் கடந்ததும் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுகின்றன.

அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாக புகார் வருகிறது. டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு எதிரே ரோட்டின் மையத்தில் உள்ள மின் கம்பங்களில் விளம்பர அட்டைகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன.

உக்கடம் முதல் சுங்கம் சந்திப்பு வரை வாலாங்குளம் ரோட்டில் உள்ள மின் கம்பங்களிலும் காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், கமிஷனர் அலுவலகம் செயல்படும் ஸ்டேட் பாங்க் ரோட்டிலும் இருக்கின்றன.

டவுன்ஹாலில் உள்ள அலுவலகத்துக்கு தான், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனும், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரனும் தினமும் வருகின்றனர்.

அப்போது மட்டும் இந்த விளம்பர பலகைகளும், அட்டைகளும் எங்கே ஒளிந்து கொள்கின்றன என்று தெரியவில்லை.






      Dinamalar
      Follow us