கடவுள் இந்த உலகை எப்படி படைத்தார்? ஆன்லைனில் சுவாமி சதேவானந்த சரஸ்வதி விளக்கம்
கடவுள் இந்த உலகை எப்படி படைத்தார்? ஆன்லைனில் சுவாமி சதேவானந்த சரஸ்வதி விளக்கம்
ADDED : செப் 04, 2026 05:52 PM
கோவை: கடவுள் இருக்கிறாரா, எங்கு இருக்கிறார், அவரின் உருவம் என்ன, இந்த உலகை எப்படி படைத்தார், மனிதர்கள் உட்பட உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் எப்படி தோன்றின, கடவுளின் சக்திகள், அவரின் கட்டளைப்படி இயங்கும் மாயை மற்றும் பஞ்ச பூதங்கள் எனப்படும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் இவை எப்படி தோன்றின என எழும் கேள்விகள், சந்தேகங்கள், அவற்றுக்கான விடைகள், தீர்வுகள் என கடவுளை பற்றிய ரகசியங்களை விளக்கிச் சொல்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
சுவாமி சதேவானந்த சரஸ்வதி, தினமும் ஆன்லைனில் ஆன்மிக வகுப்புகள், பல ஊர்களில் ஆன்மிக முகாம்கள், சொற்பொழிவு நடத்தி வருகிறார்.
இவர், சமஸ்கிருதம் அறியாதவர்களும் பயனடையும் வகையில், ஆன்லைனில் தமிழில் ஸ்ரீமத் பாகவத வகுப்பு அக். 2 முதல் துவக்குகிறார்.
அனைவரும் பங்கேற்கலாம். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து, 20 வயதுக்கு மேல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினம் ஒரு மணி நேரம்; அனைத்து வகுப்புகளிலும் கட்டாயம் பங்கேற்பது அவசியம்.
88659 90846 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி, avg.tamilclass@zohomail.in என்ற இ–மெயில் முகவரி மூலமாக விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்து செப். 22க்குள் அனுப்ப வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் முனைவோர், இல்லத்தரசிகளை கவனத்தில் கொண்டு அதிகாலையில் வகுப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
