/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எவ்வளவு உயரத்தில் 'பேஸ்மென்ட்' அமைக்கலாம்? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 'காட்சியா' செயலாளர்
/
எவ்வளவு உயரத்தில் 'பேஸ்மென்ட்' அமைக்கலாம்? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 'காட்சியா' செயலாளர்
எவ்வளவு உயரத்தில் 'பேஸ்மென்ட்' அமைக்கலாம்? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 'காட்சியா' செயலாளர்
எவ்வளவு உயரத்தில் 'பேஸ்மென்ட்' அமைக்கலாம்? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 'காட்சியா' செயலாளர்
ADDED : செப் 28, 2024 05:08 AM

கட்டடத்தைச் சுற்றியும் கட்டாயம் இடைவெளி விட்டுத்தான் கட்ட வேண்டுமா? எதற்காக கட்டடத்தை சுற்றியும், இடைவெளி விடப்படுகிறது?
-சந்திரசேகர், குறிச்சி.
அரசு வகுத்துள்ள கட்டட விதிகள் அனைத்தும், நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டதுதான். நமது கட்டடத்தை சுற்றி இடைவெளி விட்டு கட்டுவதால், வீட்டின் உள்புறம் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும்.
நமது கழிவறையில் இருந்து வரும், 'பைப்'கள், சேம்பர்கள் ஆகியவற்றை செப்டிக் டேங்கில் கொண்டு சேர்ப்பதற்கும், வசதியாக இருக்கும். நமது வெளிப்புறச் சுவர்களை, பெயின்ட் அடிப்பதற்கும், தக்க இடைவெளி விட்டு கட்டுவதுதான் நல்லது.
எனது புதிய வீடு கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. புதிய முறையில், மழைநீர் சேமிப்பதற்கு ஏதேனும் வசதிகள் உள்ளதா?
-ரகுமான், கரும்புகடை.
புதிதாக 'ரெயின் வாட்டர் பில்டர்' இயந்திரம், தற்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றது. இதை பயன்படுத்தி நீரில் உள்ள தேவையற்ற பொருட்களை சுத்தப்படுத்தி, சுத்தமான நீராக மாற்றி நமது குடிநீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்த முடியும். ரூ.8,000 முதல் கிடைக்கின்றது. அந்த நீரை போர்வெலில் விட்டு, நிலத்தடி நீரை மேம்படுத்திக் கொள்ளலாம். வீட்டு வரி செலுத்தும்போது மழை நீர் தொட்டியை தனியாக கட்டாமல், இதை காண்பித்து நீங்கள் வீட்டு வரியும் போட்டுக் கொள்ளலாம்.
எனது வீடு கட்டி, மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது, சோலார் வாட்டர் ஹீட்டர் அல்லது சோலார் பேனல் பயன்படுத்தலாம் என்று உள்ளேன்; இதில் எது சிறந்தது?
-குணா, செல்வபுரம்.
நீண்டகால பயன்பாட்டை கருத்தில் கொண்டால், சோலார் பேனல் அமைத்துக் கொள்வது நல்லது. இதற்காக, முன்கூட்டிய செலவு சற்று அதிகமாக இருந்தாலும், மாத மின் கட்டணத்தை கணக்கிட்டு பார்த்தால், நீங்கள் செலவு செய்த தொகையை விரைவாக மீட்டெடுக்கலாம்.
தங்கள் உபயோகத்தின் அளவைப் பொறுத்து, ஒரு கிலோ வாட் முதல் எவ்வளவு தேவையோ அதற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கு அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டிற்கும், வீட்டிற்கும் சேமிப்பை உண்டாக்கலாம்.
எனக்கு வயது, 60 ஆகிறது. நாங்கள் அடிக்கடி எனது மகள் வீட்டுக்கு சென்று வருவதால் வீட்டில் 'லைட்' போடுவது பெரும் சிரமமாக உள்ளது. சில நண்பர்கள் 'ஆட்டோமேட்டிக் சுவிட்ச்' பயன்படுத்தலாம் என்று கூறினார்கள். விலை அதிகமாக இருக்குமா? எங்களைப் போன்றோர் எளிதாக பயன்படுத்த முடியுமா?
-ரமேஷ்குமார், ஒண்டிப்புதுார்.
தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறோம். இதை பயன்படுத்தி சாதாரணமாக, எட்டு லைட் வரை இயக்க, ரூ.5,000 செலவாகும். இதில் பழைய 'ஸ்விட்ச்' எடுத்து புதியதாக மாற்றிக் கொள்ளலாம். இதில் 'டச் ஸ்கிரீன்' போன்றவற்றையும், பயன்படுத்திக் கொள்ளலாம். இவை அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும்.
எனது வீட்டில் முதல் மாடி பால்கனியில், கண்ணாடி கொண்டு டோர் அமைக்கலாம் என எண்ணி உள்ளேன். கிரில் இல்லாமல் அமைக்கலாமா?
-மனோஜ்குமார், துடியலுார்.
உங்கள் வீடு, சிறிய பட்ஜெட்டில் அமைக்கப்பட்டிருந்தால் ரெடிமேட் ஸ்டீல் டோர்ஸ் அல்லது சேப்டி கிரில் கொண்டு அமைப்பது சிறந்தது. பெரிய பட்ஜெட்டில் வீடு அமைந்தால், அதில் நீங்கள் தாராளமாக கண்ணாடி கொண்டு அமைத்துக் கொள்ளலாம். 'சாண்ட்விச் கிளாஸ்' எனும் முறையில் பயன்படுத்தினால், வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதன் செலவு சற்று அதிகமாகும். மற்றபடி, அதிக உறுதி தன்மையுடன் இருக்கும்.
நான் தற்பொழுது வீடு கட்ட உள்ளேன். எனது வீட்டின் பேஸ்மென்ட் உயரம் எவ்வளவு வைப்பது? பலரும் பலவிதமாக சொல்வதால், எனக்கு குழப்பமாக உள்ளது. எனது 'சைட்', ரோட்டை விட இரண்டு அடி பள்ளத்தில் உள்ளது.
-கோபிநாத், சுந்தராபுரம்.
உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள ரோட்டின், மட்டத்திலிருந்து மூன்று அடி உயரத்தில் பேஸ்மென்ட்டை உயர்த்தி வைக்க வேண்டும். உங்களுடைய நிலத்தின் மட்டத்திலிருந்து, 4 முதல் 5 அடி உயரம் வைத்துக் கொள்ளலாம். அரசு, தற்போது பழைய முறையில் இல்லாமல் ரோட்டை தோண்டி எடுத்து மீண்டும் ரோடு அமைக்கிறார்கள். அதனால், நீங்கள், 3 அடி வைத்தாலே சரியாக இருக்கும்.
-பொறியாளர் ராஜரத்தினம்,
செயலாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.